சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோயில் யானைக்காக பிரத்யேக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோயில் யானை கோமதி, கடந்த சில தினங்களாக அதிக வெப்பம் காரணமாக அவதிப்பட்டு வந்தது. அதனை தணிக்க பிரத்யேகமாக நீச்சல் குளம் அமைக்கப்பட்டதை அடுத்து, ஆனந்த குளியல் போட்ட யானை கோமதி, துதிக்கையால் ட்ரம்ஸ் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
மேலும் கேமராவை பார்த்தபடியே, இசைத்தது போதுமா இன்னும் வேண்டுமா என்பதுபோல திரும்பி பார்த்து இசைத்தது வேடிக்கையாக இருந்தது.