அமரர் சிவந்தி ஆதித்தனார் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், “ஊடகத் துறை மட்டுமின்றி, கல்வி, விளையாட்டு, இளைஞர் மேம்பாடு என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த அமரர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பிறந்த தினம் இன்று.
இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்திய அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.