டாக்டர்.சிவந்தி ஆதித்தனாரின் சமுதாய பணிகள் என்றென்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காது மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழின் குறிப்பிடத்தகுந்த நாளிதழான ‘தினத்தந்தி’ நாளிதழின் உரிமையாளராக இருந்த, பத்மஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் அவர்களது 89-வது பிறந்த தினம் இன்று.
தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு, இதழியல் வாயிலாக பெரும் சேவை புரிந்த சி.பா.ஆதித்தனார் அவர்களின் வழியில், அவரது மகனாக ஐயா பத்மஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் செய்த சமுதாயப் பணிகள் என்றென்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காது. ஐயாவின் இந்த பிறந்த தினத்தில், பத்திரிக்கை துறையில் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளர்.