திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான ஆய்வறிக்கை நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், தவறு செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை மத்திய அரசு உடனடியாக கையில் எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வை அரசியல் ஆக்கக்கூடாது எனவும் ஜீயர் சடகோப ராமானுஜர் அறிவுறுத்தியுள்ளார்.