அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு அக்டோபர் 18-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 18-ம் தேதி அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.