கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல் பீச் ஜங்சன் அருகே வழக்கம்போல் போலீசார் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏடிஎம் மையம் அருகே போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பியோடினார். இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாம்கல்அலி என்பவரை கைது செய்தனர். இவருக்கும், கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு தமிழக போலீசாரிடம் சிக்கிய கொள்ளையர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.