குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசை எதிர்கொள்ள 21 அம்ச செயல் திட்டம் வகுக்கப்படுவதாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், இதையொட்டி 13 துறைகளைச் சேர்ந்த 523 பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் கோபால் ராய் கூறினார்.
மேலும், தலைநகரில் கட்டுமான பணி மேற்கொள்பவர்கள், அதற்கான 14 அம்ச விதிகளை பின்பற்ற வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.