அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸால் தாம் ஓரம்கட்டப்படுவதாக அதிபர் ஜோ பைடன் கவலை அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
முதுமை காரணமாக அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோபைடன் விலகி, கமலா ஹாரிஸுக்கு வழிவிட்டார். இந்நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் தன்னை கமலா ஹாரிஸ் புறக்கணிப்பதாக ஜோபைடன் வேதனை தெரிவிப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.