திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை மிஸ்டு கால் மூலமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
தொடர்ந்து திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலுக்கு வெளியில் இருந்த பொதுமக்களுடன் உரையாடினார். தொடர்ந்து செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பாஜக உறுப்பினராகும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.