தென்னக ரயில்வே தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தலுக்காக டிஆர்கேஎஸ் அமைப்பு வேட்பு மனு தாக்கல் செய்தது.
தெற்கு ரயில்வே தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தல் டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் தொழிற்சங்கங்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன.
இந்நிலையில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் துணை அமைப்பான DRKS , தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது. இதில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் DRKS தொழிற்சங்க அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.