திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் குடும்பத்துடன் பணிமனையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த பணிமனையில் மீட்டர் கேஜ் மற்றும் பிராட்கேஜ் ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இவைகள் இந்தியா முழுமைக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்படுகிறது.
இந்நிலையில், இங்கு ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் ரயில்வே தொழிற்சாலையை ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும், அங்குள்ள ரயில் பெட்டி மற்றும் ரயில் இன்ஜினுடன் செல்பி எடுத்துக் காெண்டனர்.