கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டதால், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அரிவாளுடன் தகராறு செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள செட்டிகுப்பம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறி, , ஊராட்சி மன்றத் தலைவருடன் ஒருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், ஆவேசம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் இந்திராவின் கணவரான ரவிச்சந்திரன், கேள்வி கேட்டவரின் வீட்டு முன்பு சென்று ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.