கள்ளக்குறிச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருவரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 81 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் கடைகள் மூலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.