ஆயுத பூஜையை முன்னிட்டு உதகையில் பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
சேலத்தில் இருந்து உதகை நகராட்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட கரும்புகளை பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
ஒரு கட்டு கரும்பு 600 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், உதகை மார்க்கெட்டில் அலங்கார பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது.