நவராத்திரி திருவிழாவையொட்டி குஜராத்தில் தீப விளக்குகளால் அம்மனின் உருவத்தை வரைந்து பக்தர்கள் வழிபட்டனர்.
நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. காந்தி நகரில் நள்ளிரவு நடைபெற்ற நவராத்திரி விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியில் தீப விளக்குளால் அம்மனின் உருவத்தை வரைந்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி மகா ஆரத்தி எடுத்து அம்மனை தரிசித்தனர். இதுதொடர்பான ட்ரோன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.