கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பழங்கால கார்களின் அணிவகுப்பு கண்காட்சி நடைபெற்றது.
கர்நாடகாவில் தசரா விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக விதான் சவுதா அருகே பழங்கால கார்களின் அணிவகுப்பு கண்காட்சி நடைபெற்றது.
2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பழங்கால கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.