தொடர் விடுமுறையையொட்டி அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட தனியார் பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆயுத பூஜை, விஜய தசமி என தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், அரசு மற்றும் தனியார் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது தனியார் பேருந்துக்குள் ஏறிச்சென்ற அதிகாரிகள் பயணிகளிடம் நேரடியாகவே கட்டணம் குறித்து கேட்டறிந்தனர். விதி மீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.