சேலத்தில் ஆயுத பூஜைக்கு பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிகளுக்கு படையெடுத்த பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சேலத்தில் உள்ள கடை வீதிகளில் பொருட்களை வாங்க அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதேபோல் சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட், சூரமங்கலம், தாதகாப்பட்டி பகுதிகளிலும் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.