நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள ஒரு கோயில் முன்பு 4 கரடிகள் விளையாடி கொண்டிருந்தன, இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், கரடிகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.