நவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள சந்தவெளி அம்மன் ஆலயத்தில் ஹரிஹர அலங்காரம் நடைபெற்றது.
நவராத்திரி பெருவிழாவையொட்டி இக்கோயிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் நடத்தப்படும் ஹரிஹர அலங்காரத்தில் இந்தாண்டும் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். ஒருபுறம் சிவனாகவும், மறுபுறம் பெருமாளாகவும் தோன்றிய அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.