கேரள லாட்டரி துறையின் திருவோணம் பம்பர் லாட்டரியில் மெக்கானிக் ஒருவருக்கு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் அல்தாஃப் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார். அதன்படி கடந்த மாதம் வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரி பகுதிக்கு சென்றவர் கேரள லாட்டரி துறையின் திருவோணம் பம்பர் லாட்டரி வாங்கியுள்ளார்.
அதில் முதல் பரிசாக அல்தாஃபிற்கு 25 கோடி ரூபாய் கிடைத்த நிலையில், இதன் மூலம் சொந்த வீடு வாங்குவேன் எனவும் மகன், மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.