சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசிய மேயரின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியது.
காரைக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து வெள்ளை அறிக்கை தருமாறு அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்டு கொந்தளித்த திமுக கவுன்சிலர் ஒருவர் அதிமுக கவுன்சிலர் பிரகாஷை தாக்க முயன்றார். அப்போது மாநகராட்சி மேயர் முத்துதுரை, பிரகாஷை ஒருமையில் பேசி கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார்.