கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் கனமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு எழுதிள்ள கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.