புளோரிடா மாகாணத்தை பாதிப்புக்குள்ளாக்கிய மில்டன் புயலால் 9 பேர் பலியாகியுள்ளனர்.
புளோரிடா மாகணத்தில் ஏற்கனவே ஏற்பட்ட ஹெலென் புயலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் மில்டன் என்ற புயல் நகரத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.
தம்பா பகுதியில் கரையை கடந்த இந்த புயலால் ஏராளமான வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் சாலைகளில் ஆங்காங்கே முறிந்து விழுந்து காணப்படுகின்றன.