மத்திய பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழிதாக்குதலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் லெபனான் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சேதமடைந்த கட்டிடங்களை அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.