உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் நடைபெற்றது.
முன்னதாக மகிஷாசுரமர்த்தினி கோலத்துடன் கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. அங்கு மகிஷாசுர வதம் நடைபெற்ற நிலையில் முதலில் மஹிசாசூரனை வதம் செய்த அம்மன், 2-வது தலையாக சிங்க முகமாக அவதாரம் எடுத்த சூரனை வதம் செய்தார். 3-வது தலையாக எருமை முகமாகவும், 4வது தலையாக சேவலாகவும் வந்த சூரனை வதம் செய்தார். பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.