வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா, ஏற்கனவே 2-0 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் ஐதராபாத்தில் மூன்றாவது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி ‘பேட்டிங்’கை தேர்வு செய்தது. சூர்யகுமார் மற்றும் சாம்சன் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு வலு சேர்த்தனர். சூர்யகுமார் 75 ரன்களும் சாம்சன் 111 ரன்களும் விளாசினர்.
இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 164 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.