சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரிலீசாகும் அதே நாளில் நடிகர் விஜய்சேதுபதியின் மகன் நடித்த பீனிக்ஸ் படமும் வெளியாகிறது.
கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகிறார்.
அதேநாளில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் ரிலீசாகிறது. அறிமுக நடிகர் திரைப்படம் நட்சத்திர நடிகருடன் மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.