மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாபா சித்திக் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
ஏற்கெனவே சல்மான் கானுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சல்மான் கானின் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.