10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் மாதம் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை செய்முறைத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 5-ஆம் தேதி தொடங்கும் பொதுத்தேர்வு மார்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதிவரை நடைபெறும் எனவும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை பொதுத்தேர்வும் பிப்ரவரி 22-ஆம் தேதிமுதல் 28-ஆம் தேதி வரை செய்முறைத்தேர்வும் நடைபெறவுள்ளது.
மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதியும், 11, 10 ஆகிய வகுப்புகளுக்கு மே 19-ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.