முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி மாதம் 14-ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
நடப்பு சீசனையொட்டி உடனடி முன்பதிவு வசதி ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,.
இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய பினராயி விஜயன், ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் ஐயப்ப பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்,.