பாம்பன் பாலத்தில், சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாம்பன் பாலத்தை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில் சாலையின் நடுவே காணப்படும் இரும்பு இணைப்புகள் சேதமடைந்து உள்ளன.
இதனை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்த வாகன ஓட்டிகள், விபத்தை தவிர்க்கும் விதமாக பள்ளம் ஏற்பட்ட இடத்தில் துணியை கட்டி பிற வாகனங்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தினர்.