புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்து காணப்படும் மேற்கூரையை சீரமைத்து தரக்கோரி மாணவர்களின் பெற்றோர், பள்ளி முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈட்டி தெருவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை கடந்த 3 மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரில் பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
ஆனால் 3 மாதங்களைக் கடந்தும் பள்ளியின் மேற்கூரை சீரமைக்கப்படவில்லை என்று, மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.