டெல்லியில் ரசாயனக் கிடங்கில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
டெல்லி கைலாஷ்புரி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரசாயனக் கிடங்கு அமைந்துள்ளது. அங்கு இரவு 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரசாயனக் கிடங்கில் கொளுந்து விட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
 
			 
                    















