தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை பிற்பகல் அரை நாள் விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.