தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளதால், பயணிகள் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 ஆயிரத்து 858 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அங்கு பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. பயணிகள் குறைவாக இருந்ததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.