தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க 16 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தொடர்ந்து மழை குறைந்ததன் எதிரொலியாக நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் பரிசல் இயக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 16 நாட்களுக்கு பின் ஒகேனக்கல் அருவிகளில் பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது