நெல்லை மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் துறையினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் வருவாய் துறையினர் பணியிட மாற்றம் செய்யப்படுவதை திரும்பப்பெற வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வெகு நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இதனை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்ளவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் மக்களின் மனுக்களுக்கு தீர்வு காண கால அவகாசம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.