கங்குவா படம் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 55 கோடி ரூபாய் கடன் பாக்கி செலுத்தவில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் தீர்ப்பு நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கங்குவா படம் நவம்பர் 7-ம் தேதி வரை வெளியிட மாட்டோம் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.