இந்திய – சீன எல்லைப்பகுதியில் நான்கரை ஆண்டுகளுக்கு பின்பு ரோந்து பணிகள் மீண்டும் தொடங்கின.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து எல்லையில் குவிக்கப்பட்ட வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். இதனால் சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பின்பு இந்திய – சீன எல்லைப் பகுதியில் ரோந்து பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.