அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி திருவாரூரில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்விகமாக கொண்டுள்ள நிலையில், அவரது தாயார் பிறந்து வளர்ந்த இடமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் பகுதி உள்ளது. மேலும், துளசேந்திரபுரம் தர்ம சாஸ்தா கோயிலுக்கு கமலா ஹாரிஸ் நன்கொடை வழங்கியதற்கான கல்வெட்டும் அங்கு பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், அவரை வாழ்த்தி கிராமம் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.