பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து எடுத்து வந்த தந்தை, மகள் கைது!
Aug 19, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து எடுத்து வந்த தந்தை, மகள் கைது!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் கொலை செய்யப்பட்ட பெண்ணை சூட்கேசில் அடைத்து எடுத்து வந்து, மீஞ்சூர் ரயில் நிலையத்தில் விட்டுச்செல்ல முயன்ற தந்தை, மகளை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில், நேற்றிரவு திருவள்ளூர் மாவட்டத்தின் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதிலிருந்து இறங்கிய ஆணும், ஒரு சிறுமியும் பெரிய சூட்கேஸ் ஒன்றை நடைமேடையில் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் ரயிலேறி செல்ல முயன்றனர்.

இதைக்கண்ட கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் விட்டுச்சென்ற சூட்கேஸிலிருந்து ரத்தம் கசிவதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே பாதுகாப்புப்படையினர், அதனை திறந்து பார்த்தபோது பெண்ணின் சடலம் இருப்பது தெரியவந்தது.

பின்னர், அவர்கள் இருவரும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இருவரும் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அவரது 17 வயது மகள் என்பது தெரியவந்தது.

மகளை மிரட்டி பாலியல் தொழிலுக்கு அழைத்த பெண்ணை தலையில் அடித்து கொலை செய்ததும், பின்னர் உடலை அப்புறப்படுத்த எண்ணி சூட்கேசில் அடைத்து ரயிலில் எடுத்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களிடம் ரயில்வே போலீசார் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The father and daughter who killed the woman and kept her in a suitcase were arrested!
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர உள்துறை அமைச்சருக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை!

Next Post

உறவினர் வீட்டிற்கு சென்ற குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி!

Related News

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

கிருஷ்ணகிரி : ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடித்து சாலையை நீரூற்றாக மாற்றியது!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies