சிறப்பு பேருந்தகள் இயக்கி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 20க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வார இறுதி நாட்கள், விசேஷ தினங்களில் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் கிலோ மீட்டருக்கு 30 ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்தில், வருவாய் குறைந்ததாக கூறி ஓட்டுநர் கோவிந்தராஜுக்கும், நடத்துனர் இப்ராஹிமும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் 8 கோட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு வருவாய் இழப்பை சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.