SIM CARD இல்லாமல் CELLPHONE பேசலாம் : BSNL அதிரடி - சிறப்பு கட்டுரை!
Aug 16, 2025, 01:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

SIM CARD இல்லாமல் CELLPHONE பேசலாம் : BSNL அதிரடி – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

SIM CARD-ஏ இல்லாமல் செல்போன் பேசும் தொழில்நுட்பத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. அது எப்படி? என பார்க்கலாம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் சேவை இந்தியாவில் வளரத் தொடங்கிய காலத்தில் SIGNAL நன்றாக கிடைக்க வேண்டும் என்றால் மொட்டைமாடி போன்ற உயரமான இடத்துக்கு MOBILE-ஐ கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

எதிர்முனையில் பேசுபவரின் குரல் தெளிவாக கேட்காததால், “ஹலோ… ஹலோ… TOWER இல்ல… சரியா கேக்கல… ஒரு நிமிஷம் இருங்க வீட்ட விட்டு வெளில வர்றேன்” என்று கூறியபடி வாசலுக்கு வரவேண்டியிருக்கும்.

நகரங்களிலேயே இந்த நிலைமை என்றால் கிராமப்புறங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பேசுவதற்கே இப்படியெனில் இணையத்தை பயன்படுத்த என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை 5G சேவையில் 5TH GEAR போட்டு TOP SPEED-ல் INTERNET-ஐ உபயோகிக்கும் INSTA KIDS-களால் புரிந்து கொள்ள முடியாது.

அப்போதும் சரி… இப்போதும் சரி… REMOTE AREAS என்று சொல்லப்படும் குக்கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதில் முன்னணியில் இருப்பது BSNL நிறுவனம்தான். தனியார் கம்பெனிகளுடன் ஒப்பிடுகையில் சில குறைபாடுகள் இருந்தாலும் லாப நோக்கத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்களை மனதில் வைத்து சேவையை வழங்கும் நிறுவனம் BSNL என்பதை அனைவரும் ஏற்பார்கள்.

LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன் என்பதைப் போல் இந்தியாவிலேயே முதன்முறையாக D2D எனப்படும் DIRECT TO DEVICE சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது BSNL.

“ஒரு லக்னத்தில் 9 கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் BATTERY இல்லாமலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்” என்றொரு சினிமா வசனம் உண்டு. ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தாலும் BSNL-ன் DIRECT TO DEVICE சேவையைப் பயன்படுத்தி SIM CARD-ஏ இல்லாமல் செல்போன் பேச முடியும்.

அதாவது TOWER, CABLE, WIFI போன்ற இணைப்புகள் ஏதுமின்றி நேரடியாக செயற்கைக்கோள் மூலம் செல்போனில் இருந்து அவசரகால அழைப்புகளை மேற்கொள்ளவும், MESSAGE அனுப்பவும், UPI மூலம் பணம் அனுப்பவும் DIRECT TO DEVICE சேவை வழிசெய்கிறது.

CALIFORNIA-வைச் சேர்ந்த VIASAT என்ற நிறுவனத்துடன் இணைந்து D2D சேவையை வழங்குகிறது BSNL. இதன்மூலம் குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்குதடையின்றி அவசரகால தொலைத்தொடர்பு சேவையைப் பெற முடியும்.

எனினும் D2D மூலம் சாதாரண அழைப்புகளை மேற்கொள்ள முடியுமா எனத்தெரியவில்லை. அதேபோல் இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது?, இதற்கென தனிக் கட்டணங்கள் உண்டா? என்பது போன்ற விவரங்களும் வெளியாகவில்லை.

இதுவரை அரசாங்கமும் ராணுவமும் மட்டுமே பயன்படுத்தி வந்த DIRECT TO DEVICE சேவையை முதன்முறையாக மக்களிடம் கொண்டு வந்திருக்கிறது BSNL. அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. D2D மூலம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வலுவான போட்டியாளராக மாறியிருக்கிறது BSNL..

Tags: 5G serviceMOBILEBSNLSIM CARD-A-free cell phoneNTERNETTOP SPEED
ShareTweetSendShare
Previous Post

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது ? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

ஐப்பசி மாத பௌர்ணமி – குடந்தை மகாமக குளக்கரையில் மகா லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம்!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies