கார்த்திகை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அம்மன் மற்றும் லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்டோருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
சிகப்பு மஞ்சள் நிற பட்டாடை உடுத்தியும், மல்லிகைப்பூ, சம்பங்கி பூ மாலைகள் அணிந்தும், லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் காட்சியளித்தார்.
பின்னர், மேளம் தாளம் முழங்க பக்தர்கள் தங்க தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.