திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வல்லூர் பகுதியை சேர்ந்த வினோத், தேசிய அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்தபோது மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் உள்ள அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்த நிலையல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக இளைஞர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.