தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை முப்படையினர் உறுதி செய்வதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
முப்படையினர் கொடி நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நமது முப்படையினரின் தளர்வில்லாத துணிச்சல், தியாகம், தேசபக்தி ஆகியவற்றுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
முப்படையினரே நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் உறுதியான தூண்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நாளில் நமது நெஞ்சுரம்மிக்க படை வீரர்களை நினைவுகூர வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.