நெல்லை ஆட்சியர் அலுவல வளாகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழக அரசின் சார்பில், குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்காக 100 கோடி ரூபாய் தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி, சேலைகள் முறையாக வழங்கப்படாததால் ஆட்சியர் அலுவல வளாகத்தில் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வேஷ்டி, சேலைகள் அனைத்தும், மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.