தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட போடிமெட்டு மலைசாலை, தமிழகம் – கேரளா இடையேயான முக்கிய வழித்தடமாக விளங்கி வருகிறது. இவ்வழியை மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில், 11வது கொண்டை ஊசி வளைவில் 2 ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன.
இதனால் கனரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், சிறிய ரக வாகனங்கள் மட்டுமே அவ்வழியாக இயக்கப்படுகின்றன.
இதனிடையே கோவை மாவட்டம் ஆழியார் கவியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் செல்லவும், தாடகநாச்சி அம்மன் கோவில் கார்த்திகை தீப விழாவுக்கு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.