மகா தீப ஏற்றும் நிகழ்வையொட்டி திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அண்ணாமலையாரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க போலீசாருக்கு ஸ்வயம் சேவகர்கள் உதவி புரிந்தனர். மேலும் தூய்மை பணியிலும் ஈடுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டனர்